Madurai Customers Order above ₹ 500.00 and get free delivery.
Category : - Raw Material

Vetti Ver (Root)

வெட்டிவேர்
Botanical Name : Andropogan moricatos
80.00
Qty. / Wt. : 100gm

Availability : 2 Item(s)
Fun Fact
...
Aloe the juice soothes burns and sunburns. Some people drink Aloe juice for a st

சருமம் மிருதுவாக :
சிலருக்கு தோள்பட்டையிலும் முதுகுப் புறங்களிலும் பரு போன்ற சிறு கட்டிகள் இருக்கும். சில ஆண்களுக்கு உடலில் வரி வரியாக இருக்கும்.
இந்த இரு பிரச்சனைகளுக்குமான ஒரே தீர்வு வெட்டி வேரில் இருக்கிறது.
பச்சைப்பயறு - 100 கிராம்
சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் - 50 கிராம்
இந்த இரண்டையும் சேர்த்து நன்றாக அரையுங்கள். இந்தப் பவுடரை உடலுக்குத் தேய்த்துக் குளியுங்கள்.
தினமும் இப்படி குளித்து வந்தாலே சிறு கட்டிகளும் வரிகளும் ஓடிப் போகும். சருமமும் மிருதுவாகும்.

பருக்கள் நீங்கி அழகான சருமம் பெற :
முகம் முழுக்க அடிக்கடி பருக்கள் தோன்றி அவதிப்படுகிறவர்களுக்கு, அருமருந்தாக திகழ்கிறது இந்த வெட்டிவேர் விழுது...
சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் - ஒரு டீஸ்பூன்
கொட்டை நீக்கிய கடுக்காய் - 1
இந்த இரண்டையும் முந்தின இரவே கொதிநீரில் ஊறவையுங்கள். மறுநாள் இதை அம்மியில் அரைத்து, அந்த விழுதை பருக்கள் மீது முழுவதுமாக மறைப்பதுபோல் தடவுங்கள்.ஒரு நாள் விட்டு ஒருநாள்
இப்படிச் செய்து வந்தாலே பருக்கள் உதிர்ந்துவிடும். பருக்கள் இருந்த வடுவும் தெரியாது என்பதுதான் இந்த சிகிச்சையின் சிறப்பம்சம்.

தழும்புகள் நீங்கி வளவளப்பான சருமம் பெற :
பழைய பருக்கள் ஏற்படுத்திவிட்டுப் போன தழும்புகளால், சிலருக்கு முகம் கரடு முரடாக இருக்கும் அதற்கான நிவாரணம் இதோ...
ஒரு பிடி வெட்டிவேரை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் போட்டு மூடுங்கள். ஒரு இரவு இது ஊறட்டும். மறுநாள் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடுங்கள். முந்தின நாள் ஊறவைத்த வெட்டிவேரையும் தண்ணீரையும்
தனியே பிரித்து வையுங்கள்.இப்போது கொதிநீரில் வெட்டிவேரைப் போட்டு ஆவி பிடியுங்கள். அப்படியே முகத்தைத் துடைக்காமல், வெட்டிவேர் ஊறின தண்ணீரில் சுத்தமான வெள்ளைத் துணியை அமிழ்த்தி பிழிந்து
முகத்தை ஒற்றி எடுங்கள். வாரம் இரு முறை இப்படிச் செய்து வந்தால், தழும்புகள் மறைந்துவிடும். வெட்டிவேர் முகத்தில் உள்ள எண்ணெய் பசையை எடுத்துவிடும்.

கூந்தல் நறுமனத்துடன் இருக்க :
வெட்டிவேர் - 100 கிராம்
வெந்தயம் - 100 கிராம்
இரண்டையும் சீயக்காய் மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் தேய்த்து குளிக்கும் போதெல்லாம் சீயக்காய்க்குப் பதில் இந்த பவுடரை பயன்படுத்துங்கள்.
தொடர்ந்து இதைச் செய்தாலே முகத்தில் எண்ணெய் வழியாது. அதோடு உங்கள் கூந்தல் நறுமனத்தோடு இருக்கும்.

முடி நன்கு வளர :
சுத்தமான தேங்காய் எண்ணெயுடன், வெட்டி வேர் சேர்த்து ஊறவைத்து தலைமுடிக்குத் தேய்த்துவர, தலைமுடியின் வேர்க்கால்கள் பலப்படும். முடி உதிர்வது நிற்கும். பளபளப்பாகவும் கருமையாகவும் வளரும்.
கண்களும் குளிர்ச்சியடையும்.

உடல் குளிர்ச்சியுடன் இருக்க
நாம் அன்றாட பயன்படுத்தும் குடிநீரில் வெட்டிவேரை வெள்ளை துணியில் கட்டி போடவும். இதனால் வெட்டிவேரின் நறுமணம் மற்றும் குளிர்ச்சி குடிநீரில் இறங்கி குடிநீர் குளிர்ச்சியாகவும் நறுமணத்துடனும் இருக்கும்.
இதனை நாம் அன்றாடம் குடிநீராக பயன்படுத்தினால் உடல் குளிர்ச்சியாக இருக்கும். மேலும் நா வறட்சி, தாகம் தீரும். மன அழுத்தம் குறைந்து மன மகிழ்ச்சி கூடும்.

-

Botanical Name : Plectranthus Vettiveroides


English Name : Coleus Vettiveroides Root


Tamil Name : வெட்டிவேர் / Vetiver


Hindi Name : वलक / Valak


Malayalam Name: ഇരുവേലി / Iruvelli


Telugu Name : కురివేరు / వెట్టివేరు / Kuriveru,vettiveru

For more than three generations, Kannadiyar.com takes pride in reviving some of the ancient Siddha formulations under the name Kannadiyar. The company is actively engaged in selling quality Siddha and Ayurveda products, which includes raw materials, seeds, powders, roots, lehiyams, juices, health & hygiene products, hair oils and more.

All products available with us are eco-friendly and without side-effects. Our passion lies in the supply of quality products in the best possible lowest price.

Customer Reviews

No reviews have been published. Be the first to write a review.


Score: