Madurai Customers Order above ₹ 500.00 and get free delivery.
Category : - Pooja Products

108 Homa Jaman Set

108 ஹோம சாமான் செட்
Brand : Kannadiyar
450.00
Qty. / Wt. : 1 No.

Availability : 1 Item(s)
Fun Fact
...
Figs match calcium in milk.

ஹோம குண்டத்தில் பலவிதமான மூலிகைப் பொருட்களும், தெய்வீக சக்தி நிறைந்த பலவிதமான திரவியங்களும் சேர்க்கப்படுகின்ற பொழுது அவற்றின் சாரமானது வாயு வடிவத்தில் நம் உடலைச் சேருகின்றது. தலை முதல் பாதம் வரை அனைத்து தேகங்களுக்கும் 72,000 நாடி நரம்புகளுக்கும் இத்தகைய தெய்வீக மூலிகா பொருட்களின் வாயு பந்தன சக்தியானது ஹோமப் புகை மூலம் சேருவதால் இது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தருவதோடு, மனதிற்குத் தெளிவையும், உற்சாகத்தையும், புத்துணர்ச்சியையும் தருகின்றது.



கணபதி ஹோமம் (தடைகள் நீங்க)
மஹா சுதர்ஸன ஹோம வழிமுறைகள் மற்றும் பலன்கள்

அவஹந்தி ஹோமம் (விவசாயம்)
ஆயுஷ்ய ஹோமம் (குழந்தைகளுக்கு)
மிருத்தியஞ்ச ஹோமம் (ஆயுள் விருத்தி)
லட்சுமி ஹோமம் (செல்வ விருத்தி)
வித்யா ஹோமம் (கல்வியில் மேன்மை)
மங்கள சமஸ்கரண ஹோமம் (குழந்தை பாக்கியம்)
கனகதாரா தோத்திரம் தமிழில்
கனகதாரா ஹோமம் (திறமையை வெளிப்படுத்த)

கணபதி ஹோமத்தின் சிறப்பு!
எந்தத் தொழில் தொடங்கினாலும் கணபதி ஹோமம் செய்தபிறகு துவக்குவது மிகச்சிறந்த பலனைத்தரும். வீடுகளில் கிரகப்பிரவேசம் நடத்தும்போது கணபதி ஹோமம் நடத்தி, புதுவீடு புகுவது எக்காலமும் நன்மை தரும். குடும்பத்தில் தொடர்ந்து சுகவீனம் ஏற்பட்டால் கணபதி ஹோமம் நடத்தி உடல்நிலை நன்றாகப் பெறலாம்.

லஷ்மி குபேர ஹோமம்
வழிபட வேண்டிய தெய்வம்: நவநிதிகளுடன் குபேரன் மற்றும் லஷ்மிதேவி, சிவப்புநிறப்பட்டு சாத்திய இரண்டு கலசங்களில் லஷ்மி குபேரனை வர்ணித்து செந்தாமரை செவ்வரளி மலர்களால் அலங்கரித்து குரேப கோலமிட்டு சதுரவடிவ ஓம குண்டம் அமைக்க வேண்டும். வடக்கில் பார்க்கும்படி கலசம் வைக்கலாம். வலம் புரிச்சங்கு அலங்கரித்து வைக்கவும். பலன்கள்: செல்வச் சேர்க்கை, பெரிய மனிதர்கள் நட்பு, அரசு பதவிகளில் அனுகூலம், பொருளாதார வளர்ச்சி, நவநிதி தர்ஸனம்.

வழிபடும் தெய்வம்: பார்வதி தேவி, இரண்டு கலசங்களில் பார்வதி பரமேஸ்வரரை ஆவாகனம் செய்து வெண்பட்டு, மஞ்சள் துணிகள் சாத்தி, மாலை அணிவித்து வைக்க வேண்டும். பெண்ணுக்குரிய நட்சத்திரங்கள், வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் செய்யலாம். காலை மாலை சுபவேளையில் செய்தல் நலம். சதுரமேடையில் ஹோமம் செய்க. பலன்கள்: பெண்களுக்குத் திருமணத்தடை நீங்கி அழகான நல்ல கணவனை அடைவது உறுதி. கணவன் மனைவி அன்பு பலப்படும்.


ஆவஹந்தி ஹோமம்
வழிபட வேண்டிய தெய்வங்கள்: பிரதானமாக அன்னபூரணி, விஷ்னு, இந்திரன், பகன், தாதா, பச்சை நிரத்துணி சாற்றி, மூன்று கலசங்களில் ஐவகை மலர்க் கதம்பம் சாற்றி ஆவாதிக்க வேண்டும். சிவாக்னி என்னும் முக்கோண ஓம குண்டம் அமைக்கவும். பலன்கள்: அரசு அனுகூலம், அரசாங்கத்தில் தொந்தரவின்மை, அரசியலார்க்கு ஆதாரம், நாட்டில் பஞ்சம் போகுதல், கோவில் கும்பாபிஷேகத்திற்குத் தடை இருப்பின் விலகும். ஆவகந்தீயும் அடுப்புத்தீயும் இருந்தால் நாட்டில் பஞ்சமில்லை போன்ற பழமொழி உண்டு.

-

-

For more than three generations, Kannadiyar.com takes pride in reviving some of the ancient Siddha formulations under the name Kannadiyar. The company is actively engaged in selling quality Siddha and Ayurveda products, which includes raw materials, seeds, powders, roots, lehiyams, juices, health & hygiene products, hair oils and more.

All products available with us are eco-friendly and without side-effects. Our passion lies in the supply of quality products in the best possible lowest price.

Customer Reviews

No reviews have been published. Be the first to write a review.


Score: